திமுக பெண் கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்..... துரைமுருகன் அறிவிப்பு

 


சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியில் சென்னை மாநகராட்சியின் 113 ஆவது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் பிரேமா சுரேஷ் இருக்கிறார். 

இவரை தற்போது பொதுச் செயலாளர் துரைமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார். அதாவது கட்சியின் நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்து துரைமுருகன் நீக்கி உள்ளார்.

இந்நிலையில் பிரேமா சுரேஷ் சமீபத்தில் மழை  பாதிப்புகள் தொடர்பாக தொலைக்காட்சிக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி கொடுத்ததுள்ளார். இது தொடர்பாக கட்சி மேல் இடத்திற்கு புகார் சென்றுள்ளது. 

அதாவது சென்னையில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்துள்ளதால் நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு மழை நீர் வடிகால் பணிகள் பழையது என்பதால் மழை நீரை வெளியேற்ற முடியவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இதனால் தான் அவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்யதுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments