நாங்கள் சிலரைப் போல் குவாட்டர் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது கிடையாது - பேரரசு



 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருமாவளவன் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று கூறினார். அதன் பிறகு நடிகர் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அவரை ஒரு கூத்தாடி என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்கிறார்கள். அந்த வகையில் விசிக கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் விஜய் ஒரு கூத்தாடி எனவும் அவருக்கு திருமாவளவனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்‌. விஜயை அவர் கூத்தாடி என்று விமர்சித்தது சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, அரசியல்வாதிகளை விட கூத்தாடிகளுக்கே சமூக அக்கறை அதிகமாக இருக்கிறது. ஒரு அரசியல் வாரிசு சினிமாவுக்கு வந்தால் நாங்கள் ஆதரித்து வரவேற்கிறோம். ஆனால் சினிமாவில் இருந்து யாரேனும் அரசியலுக்கு சென்றால் அவர்களை கூத்தாடி என்று சொல்வது வேதனையாக இருக்கிறது. மேலும் நாங்கள் சிலரைப் போல் குவாட்டர் கொடுத்து கூட்டத்தை கூட்டுவது கிடையாது என்று கூறினார்.

Post a Comment

0 Comments