கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை


திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட், பெத்திகுப்பம், சுண்ணாம்புகுளம், தேர்வழி, மங்காவரம், சித்தராஜ் கண்டிகை, பெரிய ஒபுளாபுரம், எளாவூர் பஜார், புதுவாயில், மேல்முதலம்பேடு, பன்பாக்கம், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. ஒவ்வொரு குடியிருப்பு வீடுகளில் ஐந்து நபர்கள் இருந்து பத்து நபர்கள் வாழ்ந்து வருவது வழக்கம் கடந்த காலங்களில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தபோது சாலை, ஏரி, ஆங்காங்கே திறந்தவெளியில் மலம் கழிப்பது குறிப்பிடத்தக்கது.

 இதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் காலரா, மலேரியா ஆகிய தொற்று நோய்கள் அடிக்கடி உருவாகி மனிதன் உயிர் போகும் நிலை இருந்து வந்தது. இதனை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்ந்து துண்டு பிரசுரம் , அறிப்பு பலகை மூலம் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது தமிழக அரசு இதனால் பல பொது இடங்களில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பொதுப் கழிப்பிடம், தனியார் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் திறக்கப்பட்டது. 

இதனால் தொற்று நோயும் மிகவும் படிப்படியாக குறைந்தது அதுமட்டுமல்ல தமிழக அரசு கட்டித் தரப்படும் அரசு தொகுப்பு வீட்டின் உடன் தூய்மை பாரதம் இயக்கம் சார்பாக திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் வகையில் பன்னிரண்டாயிரம் ருபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் கட்ட வேண்டும் என ஸ்கீம் ஒன்றை வெளியிட்டது. அதில் பெரும்பாலான மக்கள் திறந்து வழியில் மலம் கழிப்பதை தவிர்த்து அரசு கொடுக்கும் கழிப்பறை கட்டிடத்தை கட்டி சுகாதாரத்தை காத்து வந்தனர்.

ஆனால்  தற்பொழுது கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் வந்ததால் ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகளும் தொழில் நிறுவனங்களும் அதிகமாகியது இதனால் வீட்டில் கழிவுநீர் தொட்டி தேங்கியதும் அதனை பொதுமக்கள் தனியார் லாரிகள் மூலம் அகற்றப்படுவதும் வழக்கமாகி உள்ளது. 

அப்படி அகற்றப்படும் கழிவுநீர் ஆனது கழிவுநீர் உரிமையாளர்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட வயல்வெளிகளில் கழிவு நீரை விடப்படுவதால் கால்வாய் மற்றும் குளங்கள் மாசடைந்து பெரும் தொற்றுநோய் பருவம் அபாயம் ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊடக வாயிலாக செய்திகள் போடப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்தும் அபராதம் விதித்து அரசு அதிகாரிகள் ஈடுபட்டதால் கழிவுநீர் உரிமையாக மற்றும் பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமிருந்து அனைவரும் கழிவுநீர் வாகனங்களை விற்றும் வகையில் பாதிக்கப்பட்டவர் ஆனால் தமிழக அரசு பெருநகரங்களில் கல்வி சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கும்மிடிப்பூண்டி வட்டார  கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர் சங்கம் சார்பாக சுமார் ஐந்து வருடங்களாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கும்மிடிப்பூண்டியில் அமைக்க வேண்டும் எனவும் அந்த இடத்தில் அந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை செடி கொடிகள் அமைத்து பூங்காக்களுக்கு நீரை பயன்படுத்த வேண்டும் எனவும் அப்பொழுது நீர் வளமும் பாதிக்காது என கழிவு நீர் சங்க சட்ட ஆலோசகர்  சம்பத் தலைமையில் பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். 

ஆனால் இதனால் வரை கும்மிடிப்பூண்டியில்  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரவில்லை என்பது பெறும் குற்றச்சாட்டு ஆகும்.இதற்கிடையில் ஒரு சில வாகனங்கள் வீடுகளில் எடுக்கும் கழிவு நீரை திறந்தவெளியில் மீண்டும் விடுகிறார்கள் என பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். 

மீண்டும் இதை அறிந்த கழிவுநீர் உரிமையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை வேற்காடு சென்னை கொல்கத்தா தேசிய சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு உடனடியாக கும்மிடிப்பூண்டி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பியவாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர் அத்தோடு மீண்டும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணக்குமாரிக்கு கோரிக்கை மணு  அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தீர்வு காண வேண்டுமென பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments