தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ள கண்ணுவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திக் குமார், ராஜேஷ் மற்றும் அவர்களது நண்பர்களான சதீஷ்குமார், பாண்டி, சதீஷ்குமார் ஆகியோர் அங்குள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த வெள்ள கண்ணு மற்றும் அவரது நண்பர்களான வனராஜா, உதயகுமார், சுரேஷ், கேப்ரியல் ஜெயராஜ், பாரதி, கார்த்திக் சந்தனகுமார், பாலமுருகன் ஆகிய 9 பேரும் தகராறு செய்துள்ளனர்.
மேலும் ராஜ்குமார் மற்றும் அவர்களது நண்பர்களான ராஜேஷ் ஆகிய 2 பேரையும் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர் இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வெள்ள கண்ணு உட்பட 9 பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இதனை அறிந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் சென்று வீட்டிலிருந்து வெளியே வந்த வெள்ளைக்கணுவை வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் ராஜ்குமார் உட்பட 4 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
0 Comments