தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நிர்வாகிகள் தேர்வு..... முன்னாள் எம்எல்ஏ வாழ்த்து

 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல் மயிலாடுதுறை யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ஆசிரியர் மன்றத்தின் தலைமை நிலைய செயலாளர் ரமேஷ், துணை ஆணையராக தலைமை நிலைய செயலாளர் அறிவுடை நம்பி பொறுப்பேற்று தேர்தலை நடத்தினர்.


 மாவட்ட தலைவராக  மதிவாணன், மாவட்ட செயலாளராக துரை, மாவட்ட பொருளாளராக ராஜகுமாரன், மாவட்ட கொள்கை விளக்க செயலாளராக மணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக கனகசபை, முருகேசன், சுப்பையன், மாவட்ட துணைத் தலைவர்களாக தமிழழகன், பிரம்மராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்களாக ஆல்பர்ட் தேவராஜ், ராதாகிருஷ்ணன், மகளிர் அணி அமைப்பாளராக மீனாட்சி, இலக்கிய அணி அமைப்பாளராக லாரன்ஸ் மூத்தோரணி அமைப்பாளராக தங்கமணி மற்றும் பலர் துணைப் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் ஆசிரியர் மன்ற மாநில தலைவர் பெ. இரா .இரவி மாநில வெளியீட்டு செயலாளர் ஜெக மணிவாசகம் சமூக ஆர்வலர் அ.அப்பர் சுந்தரம் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர்.  மாவட்ட செயலாளர் க.துரை நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments