அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசார் இலவசமாக பயணிக்கலாம் என மாநில உள்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து, காவல்துறை இடையே போலீசார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது. இந்த நிலையில் உள்துறை போலீசுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கவும், அதை வைத்து வருவாய் கோட்டத்தில் டவுன் புறநகர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.,
மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லா டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சேவையை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களது இருப்பிட சான்று, குடும்ப அட்டை, வயது சான்று, இரண்டு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments