பெண்ணிடம் தர்ம அடி வாங்கிய ஜெயிலர் சஸ்பெண்ட்

 


மதுரையில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு ஜெயிலராக குருசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்குள்ள ஒரு விசாரணை கைதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாக அவரின் மகள் மற்றும் பேத்தியுடன் குருசாமி பழகியுள்ளார். இதில் அந்த கைதியின் பேத்தியை மட்டும் குருசாமி தனியாக அழைத்துள்ளார். இதனை அந்த மாணவி தன் குடும்பத்தினரிடம் கூறிய நிலையில் அவர்கள் மாணவியை மட்டும் தனியாக அனுப்பிவிட்டு பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்த்துள்ளனர்.

அப்போது அவர் ரூபாய் 500 பணத்தை அந்த மாணவியிடம் கொடுத்து பின்னர் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனால் அந்த மாணவி கூச்சலிடவே அருகில் உள்ளவர்கள் வந்து அவரைப் பிடித்தனர். அந்த மாணவியின் சித்தி குருசாமிக்கு தர்ம அடி கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது குருசாமி மற்றும் மாணவியின் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர்.

இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments