மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் நமச்சிவாயம். இவர் கடந்த 9-ம் தேதி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது அங்கு சுற்றித்திரிந்த நாய் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் நாயின் காலில் காயம் ஏற்பட்டு துடிதுடித்த நிலையில் இதை கண்டுகொள்ளாமலும், உரிய சிகிச்சை அளிக்காமலும், அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுவிட்டார் என சோழவந்தானை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்ற வழக்கறிஞர் போக்குவரத்துத்துறை மதுரை மண்டல பொது மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் செக்காணூரணி பணிமனையில் பணியாற்றிவந்த அரசு பேருந்து ஓட்டுநர் நமச்சிவாயம் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டார். விசாரணையில் இச்சம்பவம் உண்மை என்று அறிந்து ஓட்டுநர் நமச்சிவாயத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மண்டல பொது மேலாளர் மணி உத்தரவிட்டார். இச்சம்பவம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments