கும்பகோணத்தில் அம்பேத்கரை பற்றி இழிவாக பேசிய அமித்ஷாவை கைது செய்ய கோரி வி.சி.கட்சியின் வழக்கறிஞர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாநிலங்களவையில்  டாக்டர் அம்பேத்கர் பற்றி இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தியும், கைது செய்யக்கோரியும் கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ராஜ்குமார், அம்பேத்கர் தொழிற்சங்க செயலாளர் அண்ணாதுரை, வழக்கறிஞர்கள் ஜெயபாண்டியன் ,அய்யப்பன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கையில் அம்பேத்கர் திருவுருவ படத்தினை வைத்துக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments