கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

 


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரி பாளையம் கிராமத்தில் தேமுதிக நிர்வாகி கேப்டன் சங்கர் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து எளாவூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து சின்னஓபுளாபுரத்தில் ரவி ஏற்பாட்டில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூர் பகுதியில் நகர செயலாளர் ஜெயவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று நிகழ்வினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments