சென்னையில் கடந்த 6-ம் தேதி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் பின்னர் கலந்துக்கவில்லை என்று அறிவித்தார்.
நடிகர் விஜய் மேடையில் வைத்தே நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணிகளின் அழுத்தம் தான் காரணம் என்று கூறினார். ஆனால் இதனை திருமாவளவன் மறுத்தார். இந்நிலையில் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசியதால் 6 மாதக்காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து ஆதவ் அர்ஜுனா பல்வேறு விஷயங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு திமுக அழுத்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
திருமாவளவனிடம் அமைச்சர் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள கூடாது என்று கூறினார். அவர் நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் கூட்டணியில் பிரச்சனை ஆகிவிடும் என்று திருமாவளவனிடம் கூறியதாக கூறியுள்ளார். திமுகவின் அணுகுமுறை என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் முதிர்ச்சியற்றது என்று கூறினார். மேலும் ஆதவ் அர்ஜுனா இந்த தகவலை ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது கூறிய நிலையில் இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments