கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி பெய்த பயங்கர கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், வெள்ளரிமலை, புஞ்சிரி மட்டம், அட்டமலை, மேம்பாடி, சூரல் மலை ஆகிய இடங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
இந்த நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரளா அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது வயநாடு நிலச்சரிவை அதிதீவிர பேரிடராக அறிவித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அதிதி பேரிடராக அறிவித்த போதிலும் சிறப்பு நிதி தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments