விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது



விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று கம்பம் நகரில் தாத்தப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட, நகர், மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.

கூட்டத்திற்கு  கோட்டச் செயலாளர் திரு கண்ணாயிரம் ஜி,  மாநில பஜ்ரங்கள் பொறுப்பாளர், கம்பம் ஜெயபிரகாஷ் ஜி,  தேனி மாவட்ட செயலாளர் சமய குமார் ஜி,  மாவட்டச் இணை செயலாளர்கள்  சாமி ஜி  பத்ரங்தள் மாவட்ட இணை அமைப்பாளர் ஆர்.விகார்த்திக்.

உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1)  இந்துக்களின் கோவில்களை மட்டுமே குறி கொண்டு தொடர்ந்து இடித்து வரும் மாநில நிர்வாகத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.

2)  கம்பம் உத்தமபாளையம் உட்பட மாவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஹிந்து மதம் சாராத  பிற மதத்தினருக்கு வியாபார வணிகக் கூடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது இதனை முறைப்படுத்தி இந்துக்கள் இடங்கள் ஹிந்துக்களுக்கே சொந்தம் என்ற உயர் நீதிமன்ற ஆணையை உறுதிப்படுத்த மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையை  விஷ்வ ஹிந்து பரிஷத் கேட்டுக்கொள்கிறது.

3)  புதிதாக பொறுப்பேற்ற அனைத்து பொறுப்பாளர்களுக்கும்  பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை  மாவட்ட விசுவாந்த வருஷத்தின் சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.

 கூட்டத்தின் நன்றி உரையை நகரத் தலைவர் ரவிக்குமார் ஜி அவர்கள் ஆற்றினார்.

Post a Comment

0 Comments