தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் வெள்ளத்தால் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாமக கட்சியின் சார்பில் இன்று கடலூரில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்பதற்காக பாமக கட்சியின் சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்ட நிலையில் இதனை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். மேலும் அவர் டாக்டராக மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் சிகிச்சைகளையும் வழங்கி வருகிறார்.
0 Comments