கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் திருப்பலியில் பாடப்படும் பாடல்கள் சாதகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகை அன்று நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனையில் 3000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில், காலை வளாகத்தில் 15 ஆயிரம் அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமான கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறும் பிரார்த்தனை சிறப்பு நிகழ்ச்சிகள் இயேசுபிரான் உயிர்த்தெழும் காட்சி மற்றும் கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்படுகின்றன. மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments