டெல்லியில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 


டெல்லியில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளியில் இருந்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.பி.எஸ்., ஆர்.கே. புரத்தில் இருந்து காலை 7.06 மணிக்கும், ஜி.டி. கோயங்கா, பஸ்சிம் விஹார் பகுதியில் இருந்து காலை 6.15 மணிக்கும் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்தன. தீயணைப்பு துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் பள்ளிக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments