ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய கிராம நிர்வாக அலுவலர்.... ஏன் தெரியுமா..?

 


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் சென்ட்ராயன் வட்டத்தில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு மற்றும் நிலத்திற்கு பாதை வசதி அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த முகாமில் மனு அளித்தார். இந்த நிலையில் சுரைக்காயல்நத்த கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்த மாணிக்கம் என்பவர் ரஜினியிடம் விசாரணை நடத்தினார். அரசு புறம்போக்கு இடத்தில் பாதை ஏற்படுத்தி தருவதாக மாணிக்கம் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவர் முன்னிலையில் மாணிக்கம் ரஜினியிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பாதை ஏற்படுத்தி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். கடந்த எட்டாம் தேதி மாணிக்கம் பெருமாபட்டு கிராமத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த ரஜினி 11-ஆம் தேதி மாணிக்கத்தை அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அந்த பணத்தை தருமாறு  கேட்டார். அந்த பணத்தை தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாகவும் மிரட்டினார். இதனால் அச்சத்தில் மாணிக்கம் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments