நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராசிபுரம் ரோட்டில் நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனம் அருகில் ராசிபுரத்தில் இருந்து யமஹா எம்.டி. மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் கல்லூரியில் பி. டெக்.. முதலாம் ஆண்டு படிக்கும் பேளுக்குறிச்சி அருகில் உள்ள மலைவேப்பங் குட்டை பகுதியைச் சேர்ந்த பூந்தமிழன் 20 மற்றும் ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் கல்லூரியில் 3 ம் ஆண்டு பி.எஸ்.சி பிரிவில் பயின்று வரும் ராசிபுரத்தைச் சேர்ந்த ராகுல்20 ஆகியோர் ஒன்றாக திருச்செங்கோடு நோக்கி வரும்போது, இரண்டு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் பவானியில் இருந்து திருச்செங்கோடு வழியாக ராசிபுரம் நோக்கி செல்லும் தனியார் எஸ்.வி.ஏ பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி. இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
ஜெ.ஜெயகுமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments