திருச்செங்கோட்டில் அமித்ஷா உருவப்படத்தை எரித்த ஆதித்தமிழர் பேரவையினர்


பாராளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு  குழு தலைவரும் சட்ட மேதையுமான டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயலாளர் சரவணகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் அமித்ஷாவின் உருவப்படம் எரிக்கப்பட்டது. இதனைக் கண்ட போலீசார் உடனடியாக ஓடிவந்துஎரிந்து கொண்டிருந்த அமித்சாவின் படத்தை பிடுங்கி கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பேரவையின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தமிழரசு மாவட்ட தலைவர் வேங்கை மார்பன் நகர செயலாளர் முத்துசாமி மற்றும் பேரவை சேர்ந்தவர்கள்என 25க்கும் மேற்பட்டவர்கள். கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments