ஆன்லைன் பட்டா பெற லஞ்சம்- நில அளவையரை பொறிவைத்து பிடித்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தனி வட்டாட்சியர் பிரிவில் பட்டாபிராம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஆன்லைன் பட்டா விண்ணப்பித்துள்ளார்.இந்த நிலையில் பட்டா வழங்க பரிந்துரை செய்ய நில அளவையர் 15000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சந்திரன் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு DSP கணேசன் புகார் பெற்ற நிலையில் ரசாயனம் தடவிய பணத்தை அவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

நில அளவலர் சுமன் என்பவர் லஞ்சம் பெற முயன்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார் தற்போது அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments