தென்காசி மாவட்டம் பண்பொழி, கடையநல்லூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பண்பொழி அருள்மிகு திருமலைகுமாரசாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தசுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடர்ந்து மலை பாதை,கிரிவலப் பாதை மலைப்பாதை ,பூங்கா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் அடவியினார் அணைப்பகுதி, கருப்பாநதி அணைப்பகுதி உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டார். கருப்பாநதி அணையை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியது;
கருப்பாநதி அணைப்பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும். அதுபோல் அடவிநயினார் அணை, குண்டாறு அணை பகுதியில் உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்படும் என்றார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி பொறியாளர் சரவணன் உதவி பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளர் செல்லத்துரை, பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், வடகரை பேரூராட்சித் தலைவர் சேக்தாவூது சேர்த்தார் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் இசக்கி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
முன்னதாக தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளர் செல்லத்துரை அமைச்சரிடம் அளித்த மனுவில் ,கடையநல்லூர் அட்டை குளத்தில் படகு சவாரி வசதியை ஏற்படுத்த வேண்டும். கருப்பாநதி அணைக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் கருப்பாநதி பகுதியை சுற்றுலா பகுதியாக மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
0 Comments