திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் தமிழகத் துணை முதல்வரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் கவரப்பேட்டையில் உள்ள டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வில்சன் நிலவழகன் M.D.,(Cardio).,திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மருத்துவர் அணி தலைவர் டாக்டர் அ.பாலமுருகன் M.D.,(Siddha)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் இரத்த தான முகாமை துவக்கி வைத்து ரத்த தானத்தில் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார். இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மு.மணிபாலன்,ஆரணி பேரூர் கழகச் செயலாளர் பி.முத்து,டி.ஜெ.எஸ் கல்வி குழுமத்தின் இயக்குனர் டி.ஜே.தினேஷ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா சசிதரன், கோளூர் நிர்மலா,மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகேய பிரசாத்,எஸ்.சாந்தாகுமார்,மருத்துவ அணி துணை தலைவர்கள் சி.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி தொகுதி மருத்துவ அணி பொறுப்பாளர் என்.பாலச்சந்தர், கும்மிடிப்பூண்டி தொகுதி துணை அமைப்பாளர் ஆண்டவன் ஆகாஷ், பொன்னேரி தொகுதி துணை அமைப்பாளர்கள் ரியாஸ்அகமது,அன்புச்செல்வன்,ஆரணி சாய்சத்தியம்,பொன்னேரி தேவன்பு மற்றும் மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், வேல்ஸ் மருத்துவ கல்லூரி சார்பில் கலந்து கொண்ட மருத்துவக்குழுவினர்கள் ரத்த தானத்தை பெற்று சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
0 Comments