அம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் தொடக்கம்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குறைந்த கட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் தமிழக முழுவதும் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. சென்னை பெருவெள்ளம், கஜா புயல், வயநாடு நிலச்சரிவு மற்றும் கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வந்தது. இது தவிர இரத்ததானம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளையும் தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளையின் சார்பில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 24 மணி நேரமும் ஆக்சிஜன் வசதியுடன் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவையை பெற 7278888108 என்ற எண்ணை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா காலத்திலிருந்து இன்று வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ உதவிகளும்,  வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அம்மாபட்டினத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவையை போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கோபாலப்பட்டினம், வடக்கம்மாபட்டினம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, முக்கண்ணாமலைப்பட்டி போன்ற ஊர்களிலும் ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments