பாஜக முக்கிய நிர்வாகி சிடி ரவி கைது

 


பாஜக கட்சியின் நிர்வாகி சிடி ரவி. இவர் பாஜக கட்சியின் மேலவை உறுப்பினராக இருக்கும் நிலையில் இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கர்நாடக மாநில மகளிர் நலத்துறை பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக அவர் பேசியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சையாக மாறிய நிலையில் இந்த பேச்சை கண்டிக்கும் விதமாக போராட்டம் நடைபெற்ற போது சட்டப்பேரவையில் வைத்து தன்னை இழிவு படுத்தி ரவி பேசியதாக அவர் மீது பெண் அமைச்சர் புகார் கொடுத்தார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது பாஜக எம்எல்சி சிடி ரவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments