• Breaking News

    கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது..... குத்தாலத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் இன்று கோவையில் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மத்திய ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.பேரூர் தலைவர் ரமேஷ், ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பாஜக மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் மற்றும் குத்தாலம் பேரூர் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டு மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட அலுவலகப்பிரிவு செயலாளர் குரு கிருஷ்ணா, மத்திய ஒன்றிய பொதுச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    No comments