வெவ்வேறு காரணங்களால், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோர் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.ப்ளூம்பெர்க் வெளியிட்டு இருந்த, 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி, கவுதம் அதானி வெளியேறி உள்ளனர்.தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 120.8 பில்லியன் டாலரில் இருந்து 96.7 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரிவு காரணம்.
அதேபோல் கடனும் அதிகரித்துள்ளதால் பங்கு மதிப்பு சரிந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.80 சதவீதம் சரிந்துள்ளது. தொழில் அதிபர் கவுதம் அதானி சொத்து மதிப்பு 6 மாதங்களில் 122.3 பில்லியன் டாலரில் இருந்து 82.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டும், அமெரிக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் பங்குகள் சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட முக்கிய பங்குகள் 14 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளன.
0 Comments