திருவள்ளுர் அருகே திருத்தணி கோட்டாட்சியர் வாகனம் வட்டாட்சியர் வாகனம் ஒன்றன்பின் மோதி விபத்து..... போலீசார் விசாரணை


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்தான ஆய்வுக் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

அதுபோல் திருத்தணி கோட்டாட்சியர் தீபாவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் அவரை திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கோட்டாட்சியர் வாகனம் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திருப்பாச்சூர் கூட்டுச்சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக முன்னாள் சென்ற திருத்தணி டாஸ்மாக் வட்டாட்சியர் குமார் தனது காரினை உடனடியாக நிறுத்தியுள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராமல் அந்த வட்டாட்சியரின் காரின் பின்னால் வந்த கோட்டாட்சியரின் அரசு வாகனம் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் கோட்டாட்சியர் வாகனத்தின் பின்னால் வந்த கட்டிட கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த மினி லாரியும் கோட்டாட்சியர் வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.திருத்தணி டாஸ்மார்க் வட்டாட்சியர் திருத்தணி கோட்டாட்சியர் மற்றும் பின்னால் வந்த மினி லாரி என மூன்று வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர்கள் உள்ளிட்ட யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை, வாகனங்கள் மட்டுமே சேதம் அடைந்தது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விபத்து நடைபெற்ற திருப்பாச்சூர் கூட்டுச்சாலைக்கு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments