சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டிடத்தை துரை சந்திரசேகர் எம்எல்ஏ திறந்து வைத்தார்


சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சி அலுவலக கட்டிடம் ₹30.10 லட்சம் மதிப்பீட்டில் திருநிலை கிராம நிர் வாக அலுவலகம் அருகில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்க றிஞர் துரை சந்திரசேகர் தலைமை தாங்கி புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்த வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் சோழவரம் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, ஒன்றிய பணி மேற் பார்வையாளர் ரேணுகா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் காமேஷ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments