கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் மாரிமுத்து (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மரிய சந்தியா (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று திடீரென குடும்பத்தகறாறு ஏற்பட்டது.
இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் தன் மனைவியை மாரிமுத்து அறிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் தலையை தனியாகவும் உடலை தனியாகவும் துண்டு துண்டாக வெட்டி ஒரு சாக்கு பையில் போட்டு வெளியே எடுத்துச் சென்றுள்ளார்.அவர் தன் மனைவியின் உடலை துண்டாக வெட்டி பைகளில் எடுத்துச் சென்ற நிலையில் அந்த ரத்த வாடைக்கு நாய்கள் குரைத்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவை பிடிக்க விவரம் தெரியவே அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாரிமுத்துவை கைது செய்துள்ள நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments