சென்னையிலிருந்து இன்று (டிச.,21) காலை 10.30 மணிக்கு 148 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விமானம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அதே விமானத்திலோ அல்லது வேறு விமானத்திலோ பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments