இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

 


சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் அஸ்வின். இவருக்கு வயது 38. இவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்று, சாதனை பெற்றுள்ளார். இவர், இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பு அளித்து வந்தார்.இவர் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் உட்பட 3,503 ரன்கள் எடுத்துள்ளார். அனில் கும்ளேவுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின். 2010ம் ஆண்டு முதல், இந்தியா அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், இன்று (டிச.,18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் பி.சி.சி.ஐ.,க்கு நன்றி தெரிவித்து உள்ளார். வரும் 2025ம் ஆண்டில் ஐ.பி.எல்., போட்டியில் சென்னை அணியில் அஸ்வின் களம் இறங்குகிறார்.

Post a Comment

0 Comments