தொடர் விடுமுறை.... உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்


 உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

பெரிய கோயிலின் அழகு, சிற்பக்கலை, கட்டடக் கலைகளை கண்டு ரசித்த மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், பெருவுடையாரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியதால், பெரிய கோவில் சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments