கும்மிடிப்பூண்டி,டிச.9: கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் என்.சிவாவின் திருமண வரவேற்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி என்.சிவாவிற்கும், ஆர்.திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இவர்களது திருமண விழா கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வேணுகோபால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சிறுனியம் பலராமன் பங்கேற்று வரவேற்றனர்.இந்த நிலையில் விழாவிற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் வரவேற்றார்.
மேலும் இந்த விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, மாவட்ட துணை செயலாளர் எஸ்.எம்.ஸ்ரீதர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், அதிமுக அம்மா பேரவை மாவட்ட நிர்வாகி எல்.சுகுமாறன், கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் எஸ்.டி.டி.ரவி, அதிமுக மாவட்ட நிர்வாகிகள் பல்லவாடா ரமேஷ் குமார், முல்லைவேந்தன், டேவிட் சுதாகர், அதிமுக நிர்வாகிகள் பெரிய ஓபுளாபுரம் ஏழுமலை, ஈகுவார்பாளையம் சிரஞ்சீவி, மற்றும் முன்னாள் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், சிறு புழல் பேட்டை ஊராட்சி தலைவர் சுசிலா மூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்று என்.சிவா- ஆர்.திவ்யாவை வாழ்த்தினர்.
0 Comments