மும்பை மற்றும் கொல்கத்தாவில் காங்கிரஸ் அலுவலகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் எதிராக முழக்கமிட்டு பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு, அலுவலகத்திற்குள் நுழைந்தது.
அதன்பின், அவர்கள் அலுவலகத்தின் தளவாடங்களை சேதப்படுத்தினர். அதோடு காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கூறியதாவது, மும்பை கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜவினர் சூறையாடியனர். இது ஒரு திட்டமிட்ட சதி என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான விஜய் வதேத்திவார் கூறியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை குறித்து அவதூறாக பேசினார். அதிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சிதான் இது.
நாங்கள் இதை பொறுத்துக் கொள்ள மாட்டோம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதோடு காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகே தான் காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. அதனால் எப்போதும் அந்த பகுதியில் காவல்துறையினர் இருந்து கொண்டே இருப்பார்கள். இது நடக்கப் போகிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரியாதா?. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க விட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
0 Comments