திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இரவு நேரங்களில் வெளியே காய போட்டிருக்கும் துணிகளில் குறிப்பிட்ட சில துணிகள் மட்டும் காணாமல் போனது. அதாவது வெளியே துணிகள் காய போட்டிருந்த நிலையில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரவு நேரத்தில் வந்து உள்ளாடைகளை மட்டும் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தானப்பன் என்ற 52 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தான் ஆளில்லாத நேரம் பார்த்து உள்ளாடைகளை மட்டும் திருடியது தெரியவந்துள்ளது. மேலும் இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments