இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்.
இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் இறந்துவிட்டார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு விரைந்த நிலையில் தற்போது மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அதன் பிறகு பேட்டி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றும் பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்காக இயற்றியவர் என்றும் கூறினார்.
0 Comments