நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்..... வைரலாகும் புகைப்படங்கள்

 


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதன்படி காலை நேரத்தில் இந்து  முறைப்படி கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன்படி நடிகர் விஜய், நடிகை திரிஷா, இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி பிரியா, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் என பலர் கலந்து கொண்டனர். கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வேஷ்டி சட்டையில் கலந்து கொண்ட விஜய் மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments