அழிஞ்சி வாக்ககம் ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இறகுப் பந்து போட்டி


திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி சாகர் பேட்மின்டன் அகாடமியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கி கோப்பைகள் வழங்கினார். உடன் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன், சோழவரம் ஒன்றிய கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள்  உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments