அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அண்ணாமலை அண்ணாவுக்கு சில கேள்விகள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் மணிப்பூர் விவாகரத்தில் அமைதி காத்தது ஏன்?, குஜராத் கலவரத்தில் நடந்தது என்னவென்ற கேள்விக்கு ஏன் பதிலளிக்கவில்லை?, கோவிட் பரவலை தடுக்க கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மீறி சில தலைவர்கள் ரத யாத்திரை நடத்தியது ஏன்? என்று 8 கேள்விகளை திவ்யா சத்யராஜ் எழுப்பியிருக்கிறார்.
0 Comments