யானைக்கு பலம் தும்பிக்கை..... நமக்கு பலம் நம்பிக்கை..... செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பஞ்ச்.....
அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, கூட்டணி என்பது அவ்வபோது வரும் போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது. உண்மையான உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம். யானைக்கு பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம். அந்த நம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறியுள்ளார்.
No comments