தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையராக செந்தில் வேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ஏரியில் நேற்று ஒரு சடலம் மிதந்து வந்த நிலையில் அதை காவல்துறையினர் வந்து மீட்டபோது செந்தில் வேல் சடலம் என்பது தெரியவந்தது. அவருடைய சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர் போரூரில் வசித்து வரும் நிலையில் செங்கல்பட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். உடல்பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அறிக்கை வந்த பிறகுதான் அவருடைய மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments