உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் புத்தாண்டு பண்டிகை நாளை இரவு முதல் களை கட்டும். இந்நிலையில் சென்னையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தற்போது காவல்துறையினர் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி புத்தாண்டு பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது புத்தாண்டு தினத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சென்னையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பைக் ரேஸை தடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் ரோந்து வாகன மூலம் கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் சுமார் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். அதன் பிறகு நாளை இரவு 9:00 மணி முதல் புத்தாண்டு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. மேலும் நாளை மாலை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்குவோ அல்லது குளிக்கவோ அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments