திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஆரணி வரையில் தடம் எண் 580 மாநகர பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவையினை புதுவாயல் வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பேருந்து சேவை நீட்டிக்கும் நிகழ்ச்சி ஆரணியில் இன்று நடைபெற்றது.இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்து சேவையை நீட்டித்து வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் ஆவடி, சா,மு,நாசர், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையின் வழி தடத்தில் பேருந்தில் பயணித்தனர். அப்போது நடத்துனரிடம் அமைச்சர், எம்எல்ஏக்கள் பயணசீட்டை பெற்று கொண்டனர்.
பேருந்து சேவையை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆரணி பேரூர் கழக செயலாளர் முத்து மாவட்ட கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு வாண்ன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி தெற்கு ஒன்றிய செயலாளர் கே வி ஆனந்தகுமார் புதுவாயில் ஊராட்சி மன்ற தலைவர் அற்புதராணி சதீஷ்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.கலந்து கொண்டனர்.
0 Comments