தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ஒரு நாள் மாவட்ட அளவிலான கேரம் போர்டு போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
கேரம் போர்டு போட்டிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கதிரவன் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு,சோழவரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன் தலைமை தாங்கினார்.இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்முடிபூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கேரம் போர்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசினர்.
திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியம்,பஞ்செட்டி ஊராட்சி,தச்சூர் கூட்டு சாலையில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை 8 மணிக்கு இப்போட்டி துவங்கியது.இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.போட்டியை துவைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன்,மாவட்ட பொருளாளர் ரமேஷ்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.ஜே.எஸ்.ஜி.தமிழரசன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முரளிதரன் மோகன்பாபு,சங்கர்,ஒன்றிய அவைத்தலைவர் சி.ஜே.ரமேஷ்,தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன்,ஒன்றிய குழு உறுப்பினர் சந்துரு, கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் அறிவழகன்,பஞ்செட்டி செல்வராஜ்,தர்பாரேன்யன், செபஸ்டின்,மீனா,பூபாலன், கார்த்திகேயபிரசாத்,பி.எஸ்.மோகன் ஆனந்த் யுவராஜ் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளைக்கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments