திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நீர் தேக்க பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட உயரமான 35 அடியில் தற்பொழுது 35 அடியும் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கனடியில் தற்போது 3232மில்லியன் கன அடி நீரும் ஏனா பூண்டி நீர் கேட்கும் முழு கொள்ளளவை எட்டியது.

மேலும் நீர் வரத்து 16,500 கன அடியாக  உள்ள நிலையில் அணையிலிருந்து உபரி நீராக 16500 கன அடி நீர் அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 16,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் பூண்டி நேர்த்திக்கத்தின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் நீர் வரத்து குறித்தும் நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்த துணை முதல்வர் கொசஸ்த்தலை ஆற்ரில் நீர் வெளியேற்றும் போது தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தை கண்டிப்பாக கவனித்து அதன் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் எனவும் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர் நாசர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments