காதலனுடன் சேர்த்து வையுங்கள்...... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா

 


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய என்ஜினீயர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதே நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அதன் பிறகு வாலிபர் வேறு ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

அதன் பிறகு பிரியதர்ஷினி உடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது காதலருடன் பேச பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு சொந்த ஊரில் திருமணம் ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இதனை அறிந்த பிரியதர்ஷினி தனது காதலன் வீட்டிற்கு வந்து அவரது வீட்டிற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அந்த வாலிபரின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இளம்பெண் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு இளம்பெண் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிரியதர்ஷினி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் எனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. அதை தடுத்து நிறுத்தி எனக்கு அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என கதறி அழுதபடி கூறியுள்ளார். இதனால் மகளிர் போலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments