அறந்தாங்கி தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக  ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு மாவட்டச் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்  அறந்தாங்கி எம்ஆர் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார். மாநிலத் துணை பொதுச் செயளாலர் மயிலை அப்துல் ரஹீம், மாநிலச் செயலாளர் காரைக்கால் யூசுஃப், மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் ரபீக் ராஜா, துணைச் செயலாளர்கள் A.ஷேக் அப்துல்லாஹ், புதுகை மீரான், அப்துர் ரஹ்மான் ரஹுஃப், M.ஷேக் அப்துல்லாஹ், மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா மற்றும் மாணவரணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாநில துணை பொது செயளாலர் மயிலை அப்துல் ரஹீம், மாநிலச் செயலாளர் காரைக்கால் யூசுஃப்  மற்றும்  புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள்.

 இதில் மாவட்டம் முழுவதும் உள்ள  கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், மாவட்டத்தின் ஆண், பெண் பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள் என நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதில் கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாவட்ட ஏகத்துவ எழுச்சி மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொள்வது,பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் கொடுமைகளை சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்கிறோம், சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகத்தை மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.


அமித்ஷாவின் அம்பேத்கர் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு கண்டனம்,  அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) பத்து மாத செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments