தவிட்டு பாளையம் முழு நேர நியாய விலை கடையை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் திறந்து வைத்து பொருட்கள் வழங்கினார்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி ,  அந்தியூர் பேரூராட்சியில்  கே290 அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ்   தவிட்டுப்பாளையம்  வார்டு எண் 18 ல்  முழு நேர நியாய விலை  கடையினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்து பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பி டி எஸ் ஆர். கார்த்தி அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சீனிவாசன்  , அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் , அந்தியூர் பேரூராட்சி மன்ற துணை  தலைவர் பழனிச்சாமி , மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்  கவிதா  , கௌரி,  டி. எஸ். சண்முகம் ,  பத்மநாபன்,  அ.க. செந்தில்குமார் ,  யாஸ்மின் தாஜ் ,  மணிகண்டன் ,  வெங்கடேஷ் ,  வேங்கையன் , தகவல் தொழில்நுட்ப அணி அந்தியூர் பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் , இளைஞர் அணி அந்தியூர் ஒன்றிய துணை அமைப்பாளர் மாதேஷ் , வார்டு  செயலாளர்கள் முத்து ,  விக்ட்டர் பாபு ,   சையது முஸ்தபா மற்றும்   பச்சமுத்து ,  செல்வன் ,  வெங்கடேஷ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments