நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் கலப்பதற்காக குளோரின் சிலிண்டர்கள் 5 அங்குள்ளது. ஆனால் இந்த சிலிண்டர் நீண்ட நாளாக பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த குளோரின் சிலிண்டர்களில் ஒன்றிலிருந்து கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கசிவை கட்டுப்படுத்தினர். அப்போது 2 வீரர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் உடல் நலம் முன்னேற்றம் அடைந்ததால், வீரர்கள் இருவரும் வீடு திரும்பினர். மேலும் அங்குள்ள செடிகளும் கருகத் தொடங்கின.நிகழ்விடத்திற்கு மாநில மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன்,நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீனா சைமன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் பயன்படுத்தப்படாத மேலும் 4 குளோரின் சிலண்டர்களின் நிலை குறித்து ஆய்வு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இதனிடையே நீர்தேக்கத் தொட்டி பகுதியில் வைக்கப்பட்டுள் 5 சிலண்டர்களால் எப்போது வேண்டுமானலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவைகளை உடனடியாக அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
நாகப்பட்டினம் செய்தியாளர்
மக்கள் நேரம் எடிட்டர் &
செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
0 Comments