அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி  மயிலாடுதுறை சாய் உள் விளையாட்டு மைதானத்தில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக எடுத்து நடத்தப்பட்டது.

இதில் ஏறத்தாழ 12 அணிகள் பங்கு பெற்றன இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் கல்லூரி முதல்வர் முனைவர் சண்முகசுந்தரி தலைமை தாங்கினார்,அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி இணைய இயக்குனர் முனைவர் வெங்கடாஜலபதி சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார் இந்த போட்டி நாக்அவுட் முறையில் நடைபெற்று இறுதிப்போட்டியில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழக அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியை குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் வீரமணி ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தினார்.

Post a Comment

0 Comments